Wednesday, January 27, 2010

இலங்கை தேர்தலில் அமோக வெற்றி மீண்டும் அதிபர் ஆகிறார்!


இலங்கை தேர்தலில் 14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிபர் ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதியாகிவிட்டதையடுத்து, நாட்டின் அதிபராக 2-வது முறையாக பதவியேற்கிறார். பிற்பகல் நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட மாஜி ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு 24 லட்சம் ஓட்டுகள் கிடைத்துள்ளன. ஆதரவாளர்களுடன் அவர் தங்கியிருக்கும் விடுதியை ராணுவ வீரர்கள் நள்ளிரவில் திடீரென முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடக்கும். கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போதைய பிரதமர் மகிந்தா ராஜபக்சேவும், எதிர்க்கட்சி சார்பில் ரனில் விக்ரமசிங்கேவும் போட்டியிட்டனர். ஐக்கிய விடுதலை முன்னணியை சேர்ந்த சேர்ந்த ராஜபக்சே 48 லட்சத்து 87 ஆயிரத்து 162 ஓட்டுகள் (50.29%) பெற்று வெற்றி பெற்றார். ரனில் விக்ரமசிங்கே 27 லட்சத்து 6 ஆயிரத்து 366 ஓட்டுகள் (47.43%) ஓட்டுகள் பெற்று தோல்வி யடைந்தார். அந்த தேர்தலில் தமிழர்கள் ஓட்டு போடுவதை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தடுத்ததால் ரனில் விக்ரமசிங்கே தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிந்தா ராஜபக்சே அதிபர் ஆனதும், புலிகளுக்கு எதிரான போரை பல நாடுகளின் உதவியுடன் தீவிரப்படுத்தினார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போரில், புலிகள் இயக்கத்தை அதிபர் ராஜபக்சே முற்றிலும் ஒழித்தார். இதன் மூலம் இலங்கையில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்னை ஓய்ந்தது. இந்த மாபெரும் வெற்றியால், இலங்கையில் ராஜபக்சேவின் செல்வாக்கு அதிகரித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த ராஜபக்சே பதவிக்காலம் முடியும் முன்பே அடுத்த அதிபர் தேர்தலை நடத்தி வெற்றி பெற விரும்பினார். அதன்படியே அதிபர் தேர்தலை அறிவித்தார்.
எதிர்பாராதவிதமாக, ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்து அரசியலில் குதித்தார். இவருக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. புலிகளை ஒழித்ததற்கு காரணம் நான்தான் என இருவரும் தீவிர பிரசாரத்தில் இறங்கினர். ராஜபக்சேவுக்கு வெற்றிலை சின்னமும், பொன்சேகாவுக்கு அன்னப் பறவை சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடைசி நேரத்தில், பொன்சேகாவுக்கு முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4.30 மணிக்கு முடிந்தது. மொத்தம் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாயின. திரிகோணமலை பகுதியில் 50 முதல் 60 சதவீத வாக்குகள், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் 10 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலை சீர்குலைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறையில் நேற்று அதிகாலை 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் ராணுவமும் போலீசாரும் உடனடியாக குவிந்து நிலைமையை சரிசெய்தனர். மற்றபடி, பிரச்னையின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் முடிந்ததும் நேற்று இரவு 7.30 மணிக்கே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதிபர் ராஜபக்சே ஆரம்பம் முதல் முன்னிலை வகித்து வந்தார். பிற்பகல் நிலவரப்படி, அதிபர் ராஜபக்சே 38 லட்சம் ஓட்டுகளும் மாஜி தளபதி பொன்சேகா 24 லட்சம் ஓட்டுகளும் பெற்றிருந்தனர். 14 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஜபக்சே முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதியாகிவிட்டதால், ஐக்கிய விடுதலை முன்னணி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முறைப்படி, வெற்றி அறிவிக்கப்பட்ட பிறகு, 2-வது முறையாக நாட்டின் அதிபராக ராஜபக்சே பதவியேற்கிறார்.
இதற்கிடையில், ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா தங்கியுள்ள ட்ரான்ஸ் ஏசியா விடுதியை சுற்றி நேற்று நள்ளிரவு நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். தேர்தல் முடிந்ததும் ராணுவ வீரர்களைக் கொண்டு தன்னை தீர்த்துக்கட்ட ராஜபக்சே சதி செய்திருப்பதாக அவர் பேட்டியளித்ததாகவும் தகவல்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது



யாழ். மாவட்ட இறுதி முடிவுகள்




  சரத் பொன்சேகா 

106,950 வாக்குகள், வீதம் 63.44%

மஹிந்த ராஜபக்ஷ

41,910 வாக்குகள் வீதம் 24.86%

செல்லுபடியான வாக்குகள் 

168,583 - 96.34%

நிராகரிக்கப்பட்டவை

6,402 வாக்குகள் - 3.66 %

பதியப்பட்டவை 

174,985 வாக்குகள் -24.26 %

வாக்காளர் தொகை 

721,359

யாழ். மாவட்டத்திலுள்ள இடம்பெயர்ந்த வாக்காளர்களின் வாக்குப்பதிவு முடிவுகள் இதுவரை வெளியாகாத பட்சத்தில் மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன.

மாத்தளை மாவட்ட இறுதி முடிவுகள்




   -மஹிந்த ராஜபக்ஷ

157,953 வாக்குகள் வீதம் 59.74%

சரத் பொன்சேகா 

100,513 வாக்குகள், வீதம் 38.01 %

செல்லுபடியான வாக்குகள் 

264,419 - 99.00%

நிராகரிக்கப்பட்டவை

2,666 வாக்குகள் - 1.00 %

பதியப்பட்டவை 

267,085 வாக்குகள் -77.94 %

வாக்காளர் தொகை 

342,684 

கம்பஹா மாவட்ட இறுதி முடிவுகள்




   மஹிந்த ராஜபக்ஷ

718,716வாக்குகள் வீதம் 61.66%

சரத் பொன்சேகா 

434,506 வாக்குகள், வீதம் 37.28%

செல்லுபடியான வாக்குகள் 

1,165,648 - 99.24%

நிராகரிக்கப்பட்டவை

8,960 வாக்குகள் - 0.76%

பதியப்பட்டவை 

1,174,608 வாக்குகள் -79.66 %

வாக்காளர் தொகை 

1,474,464

திகாமடுல்ல மாவட்ட இறுதி முடிவுகள்




  வீரகேசரி இணையம்  1/27/2010 1:04:08 PM -சரத் பொன்சேகா 

153,103 வாக்குகள், வீதம் 49.94%

மஹிந்த ராஜபக்ஷ

146,912 வாக்குகள் வீதம் 47.92%

செல்லுபடியான வாக்குகள் 

306,560 - 99.06%

நிராகரிக்கப்பட்டவை

2,912 வாக்குகள் - 0.94 %

பதியப்பட்டவை 

309,472 வாக்குகள் -73.54 %

வாக்காளர் தொகை 

420,835

திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்

திருகோணமலை மாவட்ட இறுதி முடிவுகள்
  -சரத் பொன்சேகா 

87,576 வாக்குகள், வீதம் 54.06%

மஹிந்த ராஜபக்ஷ

69,751 வாக்குகள் வீதம் 43.06%

செல்லுபடியான வாக்குகள் 

161,985 - 98.52%

நிராகரிக்கப்பட்டவை

2,429 வாக்குகள் - 1.48 %

பதியப்பட்டவை 

164,414 வாக்குகள் -68.18 %

வாக்காளர் தொகை 

241,133 

Tuesday, January 26, 2010

தேர்தல் முடிவுகள் – ஒரே பார்வையில் -1




                                           மகிந்த ராஜபக்ஷ
                           சரத் பொன்சேகா
ரத்தினபுரி (அஞ்சல்)
9458
4143
மொனராகலை (அஞ்சல்)
8871
3795
புத்தளம் (அஞ்சல்)
4988
2464
ஹம்பாந்தொட்டை (அஞ்சல்)
8982
3679
பதுளை (அஞ்சல்)
14998
8056
காலி (அஞ்சல்)
15640
7905
மட்டக்களப்பு (அஞ்சல்)
1491
3637
திகாமடுல்லை (அஞ்சல்)
9989
5885
மாத்தறை (அஞ்சல்)
10425
5159
களுத்துறை (அஞ்சல்)
13695
6177
வன்னி (அஞ்சல்)
2018
1845
பொலன்னறுவை (அஞ்சல்)
9971
4057
கேகாலை (அஞ்சல்)
14330
6811
கண்டி – செங்கடகல
28444
25243
காலி
25797
27625
கண்டி (அஞ்சல்)
20184
10025
கண்டி
11636
15359
அனுராதபுரம் (அஞ்சல்)
25769
10228



தேர்தல் நேரடி முடிவுகள்

தேர்தல் நேரடி முடிவுகளை இந்த இணையதளத்தில் பார்வை இடலாம் 

animated gif[PrtScr+capture_6.jpg]




பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு சிங்களவர்களின் சுற்றுலாத் தளமாகியுள்ளது

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறையில் உள்ள வீடு தென்னிலங்கையிலிருந்து யாழ் செல்லும் சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது.


யுத்தம் தற்போது முடிவடைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஏ – 9 வீதியினூடாக அதிகளவிலான தென்னிலங்கை சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவும் வியாபாரிகளாகவும் யாழ்ப்பாணம் செல்கின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களினை பார்வையிடுகின்றனர். இவர்கள் பார்வையிடும் இடங்களில் ஒன்றாக தற்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த வல்வெட்டித்துறை வீடும் மாறியுள்ளது.

படையினரால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு உடைந்த நிலையில் காட்சியளிக்கும் தேசியத்தலைவர் பிரபாகரனின் வீட்டிற்கு முன்னால் நின்று இவர்கள் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.


அத்துடன் பிரபாகரன் வீட்டு முற்றத்தில் உள்ள மண் சிறிதளவை தம்முடன் எடுத்துச் செல்வதையும் காணக் கூடியதாகவிருக்கின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


வரும் ஜனாதிபதி தோ்தல் முடிந்ததும் ஏ9 பாதை மூடப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால், கடந்த சில நாட்களாக வல்வெட்டித்துறை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


வன்னியில் வாக்குமோசடி செய்ய 20 பேரூந்துகளில் சிங்களவர்கள் வருகை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு மோசடியில் ஈடுபடுவதற்கென தென்னிலங்கையில் இருந்து வன்னிக்கு சிங்களவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இன்று முற்பகல் 9மணியளவில் 20ற்கும் அதிகமான பேரூந்துகளில் இவர்கள் ஓமந்தை வீதி ஊடாக மாங்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்னளர்.
இவர்கள் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மக்களின் வாக்கு அட்டைகளைப் பயன்படுத்தி மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களிப்பர் என அவர்களில் ஒருவர் அரசியல்வாதி ஒருவருக்கு இரகசியமாக அறிவித்துள்ளார்.
இவர்களை விடவும் இன்னும் பல பேரூந்துகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு என ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தவிடயம் குறித்து எதிரணி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களில் ஆயிரக்கணக்கானோருக்கான வாக்காளர் அட்டைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






 

தமிழ் செய்திகள் Copyright © 2009 Premium Blogger Dashboard Designed by SAER